அரசியலுக்கு வந்தபிறகும் செந்துரபாண்டியின்(விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக்கொள்கிறார் என்று பிரேமலதா கூறியுள்ளார். வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 06) நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் […]

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக […]

விளம்பர நாடகங்கள் நடிக்கும் நேரத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து முதலமைச்சர் சிந்திப்பது, தமிழக மக்களுக்கு நல்லது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்று திருப்பூரில் எஸ்.ஐ கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழகத்தில்‌ அதிகரித்து […]

நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]