மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பயிற்சி முகாமில், கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சிந்தூர் நிகழ்வைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதியின் சகோதரி” என குறிப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற அமித் ஷா, […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் பல உணர்ச்சிகரமான மற்றும் வரலாற்று தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் இன்றும் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் ஒரு சம்பவம் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பற்றி பலருக்கு தெரியும், அவர் ஒரு காலத்தில் பாராளுமன்றத்தில் ஒரு சாதாரண எம்.பி.யிடம் மன்னிப்பு கேட்டார். உடனே, அந்த எம்.பி. அழத் தொடங்கினார். இந்த சம்பவம் 1961 ஆம் ஆண்டு சாகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. […]

பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு […]

கள் மீதான தடையை நீக்க கோரி போராட்டத்தை அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தடைகளை மீறி பனைமரம் ஏறினார். நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் […]

பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

திண்டுக்கல் மாவட்ட திமுக மூத்த நிர்வாகி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் […]

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உடற்கூறு ஆய்வில் […]

இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் “ பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில […]

திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணனுக்கு, எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரித்துள்ளது. ஆரணி மற்றும் போளுர் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பதவியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு […]

ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை […]