தவாக எம் எல் ஏ வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு நிகழ்ச்சி மேடையில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. தவெக தலைவர் விஜய்யின் விருது […]

அன்புமணியை பார்த்தால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றும் எனக்கு கட்டளையிட இவர் யார் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்.. அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு தலைவர் பதவியை வழங்க முடியாது.. பாமக கட்சியை தொய்வில்லாமல் நடத்த […]

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, அண்மைக்காலமாக இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரின் இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு படைகளின் நேர்மைக்கு கேள்வி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து […]

மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்…? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும்  உழவர்களுக்கு  ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  […]

265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவின் 11 ஆண்டு சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மேலும் “ நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்திருக்கிறோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், […]

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் […]

பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகன் அன்புமணி மீதும் மருமகள் செளமியா மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட […]