புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, சீமான் தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், எச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில், நட்பு என்பது வேறு அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அவர் […]

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று 2021 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் […]

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக […]

மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார் பொதுச்செயலாளர் வைகோ. இச்சம்பவம் அக்கட்சியில் மட்டும் இன்றி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான மார்கோனி தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அக்கட்சியில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பை அடுத்து […]

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உரிய காலத்தில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும். ஆனால், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி நீர் இதுவரை தமிழ்நாட்டிற்கு […]

சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சியாமா பிரசாத் மூக்கரஜியின் 123-வது பிறந்தநாள் நிகழ்வு கோவையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ரைஸ் ஆப் நியூ இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறப்போர் இயக்கம் மின்சார துறையில் நடந்திருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை […]

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் சூரத் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய மனுவை சூரத் […]

ராஜஸ்தானில் உள்ள சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கம் லட்சக்கணக்கான மக்களின் வருமானத்தை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூடி வந்தனர். சமம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் […]

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து இசைவாணை வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்”முன்னாள்‌ அதிமுக அமைச்சர்கள்‌ மீது உள்ள ஊழல்‌ வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும்‌, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில்‌ ஒப்புதல்‌ அளிக்குமாறும்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்களுக்கு 3.7.2023 அன்று […]

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம். மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விதிக்கப்பட்ட 2 […]