அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளரான நியமிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வியூகம் தீட்டும் வேலைகள் முழுசாக துவங்கிவிட்டன. இதன் தொடக்கமாக, மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் நடைபெறும் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. “எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு […]

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு […]

மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. பாஜக அமைப்புத் தேர்தல்கள் பெரும்பாலான மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், தற்போது புதிய தேசியத் […]

30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது […]

ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கொள்கையை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்துள்ளார். அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவை விட, தமிழ்நாட்டை ஆளும் திமுகவையே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் பணிகளில் ஈடுபட்டு வரும் […]

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியில் பாமக நிர்வாகிகள் சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், […]

தொகுதி மறுவரையறை தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என‌ முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பா.ஜ.க. […]