திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துவதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் போது காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து அதிமுகவின் திட்டங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் […]

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் […]

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து […]

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 பேர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்துள்ளனர். இது பொதுமக்களின் சீற்றத்தையும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படுவதையும் தூண்டுகிறது. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்த அஜித் குமார் என்ற 27 வயது நபர் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இது போன்ற காவல் நிலைய மரணங்கள் நடப்பது முதன் முறையல்ல. இந்த […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் […]