அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். […]

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத […]

ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த […]

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட […]