தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவரும், அதிமுக நிர்வாகியுமான ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் விளம்பரப் பலகைகள் வைக்கும்போது, அதில் தனது படத்தை மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஓரத்தில் இடம்பெறச் செய்வது இவரது வழக்கம். இவரது இந்த விளம்பர உத்தியைப் பார்த்த திருச்செந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இவரை அணுகி நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரிய அளவில் கடன் […]

பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரைமொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 […]

செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான […]

243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக அடங்கிய தேசிய […]

தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் […]

மயிலாடுதுறை காங்கிரஸ் MLA ராஜ்குமார் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரின் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும்படி, போக்குவரத்து காவலர் பிரபாகரன் கூறியுள்ளார். போக்குவரத்து காவலர் பிரபாகரனுடன் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போக்குவரத்து காவலர் பிரபாகரனை […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பீகாரில், நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று முதற்கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் 2025 நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை) அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 2025 […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத […]