குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. […]

எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன் என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நேற்று உயிர்மை பதிப்பகம் சார்பாக துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும் – பாகம் 2” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூலினை எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை டாபே குழுமத்தின் இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய துர்கா ஸ்டாலின்; […]

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் […]