கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் அவரின் தாய்க்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாக்கப்பட்டன. …