fbpx

தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மதம், பொருளாதாரம், இடத்தின் …

தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அவரது அணித் தரப்பில் நாளை பொதுக்குழு நடத்த ஏற்பாடு …

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரு மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எழுந்த உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. …

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபட்சவை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட …

கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், …

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பில் இருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. …

சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு …

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வசித்து வரும் மாளிகையின் சொகுசு வாழ்க்கையை போராட்டக்காரர்களும் வாழ்ந்து பார்த்தனர்.

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள் போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட அனைத்து அறைகளிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3-வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என 3 பேர் தேர்தலில் …

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிவாயுவுக்கு நகர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், …