சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து […]

வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வக்ஃப் சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 6, 2025 அன்று பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. பல மறுஆய்வுக் […]

மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ […]

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ-யிடம் டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. […]

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெக-வில் இணைந்தது […]

தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த வருவாய்த்துறை அரசாணைகளை உடனடியாக, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறை […]

பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளில் இருந்தவர்.. ஆனால் சில ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லாமல் திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்தார்…. நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்ததாலேயே அவருக்கு அறிவுத்திருவிழாவில் பேச அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் திமுகவின் அறிவுத்திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது தனக்கு வருத்தம் […]

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இந்த நாளில் அம்பேத்கரின் சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. மேலும் சமத்துவக் கொள்கைகள், சமூக நீதிக்கான போராட்டம், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிமை பெற்றுத்தந்த பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் […]

கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதெ இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் […]