திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் மத நல்லிணக்க சூழலை சீர் குலைக்க பாஜக, ஆர்.எஸ்,எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.. திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது.. 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.. ஆங்கிலேயர் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், சீமான் என இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கரூரில் துயர சம்பவத்திற்கு பின் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியிருந்தார்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. அதை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார்.. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ தனிக்கட்சி தொடங்கப் போவதாக நான் எப்போது கூறினேன்? தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.. மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை டெல்லியில் […]

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் […]

திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு கை வைத்துள்ளது. இனிமேல் திமுக அரசு இருக்கவே இருக்காது. தீபம் ஏற்றும் வரை போராடுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஆட்சியரின் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு வந்த மனுதாரர் உள்ளிட்டோரை மாநகர போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர். நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்காத போலீஸாரை கண்டித்து […]