சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள […]

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார். சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அருண் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். சிறு வயது முதலே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியலின் மீது விருப்பம் இருந்தது. தேர்தல் வெற்றியை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் […]

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நிர்வாகிகள் நியமனம், நீக்கம், ஆலோசனைகள், கூட்டணி பேச்சுவார்த்தை என அதிரடியாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிலை குறித்து விரைவில் […]

விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார். நேற்று கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த […]

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி கே.ஏ.அருண்ராஜ், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 22 ஆம் தேதி அவர் விருப்ப ஓய்வு பெற்றதும், இன்று பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]

தமிழக வெற்றிக் கழகம் – தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தற்போதில் இருந்தே அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். […]

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ், விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தவெகவும் அதற்கு இணையாக இருக்க வேண்டும் என விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தவெகவுக்குள் கொண்டுவர விஜய் முயற்சித்து […]

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் […]

ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.15,000 வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டங்களை திருத்திய நிலையில், தற்போது கருவுறுதல் விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ’பூஜ்ஜிய வறுமை’ முயற்சியின் ஒரு பகுதியாக, பணக்காரர்கள் ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுக்கும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை நான் உருவாக்கியுள்ளேன். இது […]