குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசுமுறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து […]

கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்றால், அவரின் உயிருக்கு பாதுகாப்பு குறித்த சந்தேகமிருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; கரூரில் 41 உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை. விஜய்யின் உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இருக்குமா..? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில், அங்கு சென்றால் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் இருந்திருக்கலாம். திமுக அரசு, எப்படி […]

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண். உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த செப்-27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. சம்பவம் நடந்த உடனே விஜய் கரூர் செல்லாததும், செய்தியாளர்களின் கேள்வியை தவிர்த்து விஜய் திருச்சி விமான நிலையத்தில் ஓடியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. மேலும் 3 நாட்கள் கழித்து வீடியோ போட்ட […]

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய போது கழக்கத்தின் சட்டவிதி படி தான் நடக்க வேண்டும் என்று உருவாக்கினார்.. தொண்டர்களுக்கான இயக்கமாக அதனை உருமாற்றினார்.. கழகத்தின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை கழக தொண்டர்களுக்கு தான் இருக்க வேண்டும்.. கழகத் தொண்டர்கள் தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுகவின் […]

அரசின் தோல்விகளை மறைக்க எவ்வளவு மடைமாற்றினாலும் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் […]

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு […]

விஜய்க்கு பயிற்சியாளர்கள் அதிமுகவினர் தான் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை சரி செய்யாமல் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தால், இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவர். அதிமுக, பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக ஆட்சி […]