தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் யாரையும் உளவு பார்ப்பது கடினம் அல்ல. காதலர்கள் காதலிகளை, காதலிகள் காதலர்களை, கணவர்கள் மனைவிகளை, மனைவிகள் கணவர்களை எளிதாக உளவு பார்க்கிறார்கள். உளவு பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயன்பாடுகள் Android மற்றும் iOS தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பயன்பாட்டை யாருடைய தொலைபேசியிலும் நிறுவலாம், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]
டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 […]
அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான […]
இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டிக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அக்டோபர் 16, 2025 அன்று அறிவித்தது. போட்டிகளின் விவரங்கள் https://www.trai.gov.in/dcra-portal என்ற ஆணையத்தின் வலைத்தள இணைப்பில் இடம்பெற்றுள்ளன. போட்டிக்கான உள்ளீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 05, 2025 […]
பிரபல சமூக ஊடக தளமான ரெடிட் (Reddit) பல நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில், இன்று செயலிழப்பை (outage) சந்தித்தது. இதை உறுதிப்படுத்திய அந்நிறுவனம் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. பயனர்கள் புகார் டவுன்டிடெக்டர் (Downdetector) எனும் தொழில்நுட்பத் தள செயலிழப்புகளை கண்காணிக்கும் இணையதளத்தின் தகவலின்படி, அமெரிக்காவில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ரெடிட் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.இந்தியாவில், இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை […]
ChatGPT Go Free என்பது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய இலவச சேவையாகும். இதன் மூலம் எந்தக் கட்டணமும் இல்லாமல் ChatGPT எனும் மேம்பட்ட AI சேட் கருவியை பயன்படுத்த முடியும். ChatGPT Go Free என்றால் என்ன? யார் இதைப் பெறலாம், எப்படிப் பெறுவது, மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.. ChatGPT Go Free என்றால் என்ன? […]
புதிய வாட்ஸ்அப் மோசடி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியை போல், தீங்கிழைக்கும் (malicious) கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்களை ஏமாற்றுகிறது. “RTO Challan” என்ற பெயரில் வரும் போலியான APK கோப்பை (Android Application Package) பலர் பதிவிறக்கம் செய்ததால், பலரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக புகார்கள் வெளியாகியுள்ளன. மோசடி எப்படி நடக்கிறது? பல சமூக […]

