இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதுவிதமான மோசடிகளும் அதிகரித்து வருகிறது. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர வேலை வேண்டுமா? என்று வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர்கள் தகவல் அனுப்புகின்றனர். இதற்கு நீங்கள் என்ன வேலை என்று கேட்டால் ஒரு வீடியோவுக்கான லிங்க்கை அனுப்புவார்கள். அதனை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
கேரளாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர், உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பல்வேறு கின்னஸ் சாதனைகள் குறித்த வீடியோக்களை உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போதைய பதிவில் மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை உருவாக்குவதற்காக சக்கர நாற்காலியில் துபாய் வீதிகளில் உலா வரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளி இளைஞரின் சக்கர […]
உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி நிறுவனம் தனது 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சமீபகாலமாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீப காலமாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்தவகையில் டிஸ்னி நிறுவனமும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4000 […]
திருநங்கை பத்ம லட்சுமி என்பவர், கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 18ம் தேதி இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பார் சேர்க்கை சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட சட்டப் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இதில் கேரளாவை சேர்ந்த திருநங்கை பத்ம லட்சுமியும் ஒருவர். இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.யில் சேர்ந்த பத்ம லட்சுமி, பயிற்சிக்குப் […]
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். இந்த பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியவுடன் பழக்கடைகளில் அதிகமாக இதனை காணமுடியும். அதுமட்டுமல்லாமல் சாலையோர தள்ளுவண்டி கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை கடைகளிலும் மாம்பழ விற்பனை அமோகமாக நடைபெறும். இதனை […]
காலையில் வெறும் வயில் பால் குடிப்பதால், உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கரிப்பதோடு, தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது என்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பால் என்பது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. இருப்பினும், நம்மில் பலர் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். தினமும் காலையில் பால் குடிப்பதால் புத்துணர்ச்சி உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நிபுணர்கள் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.பால் உட்கொள்வதை […]
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2022 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் 129 நாட்கள் கழித்து, தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில், ஆயிரத்து 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 249, குஜராத் 179, கேரளா 163, கர்நாடகா 121, தமிழகம் 64, டில்லியில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் […]
காலியாக உள்ள 4,136 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து வெளியான தகவல் தவறானது என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி […]
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் […]
உலக அளவில் மாசுக் கட்டுப்பாடு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வாகனங்களுக்குத் தான் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு ஓசோன் மண்டலத்தை கடுமையாக பாதிக்கிறது. மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது பிஎஸ்6 என்ற மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் முதல் கட்ட விதிகள் நடைமுறையில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் […]