வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகள் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு கருமை படர்வது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக வியர்வை, ஈரப்பதம் மற்றும் தினசரி பயன்பாடு காரணமாக அவற்றின் பளபளப்பு குறைந்து விடும். ஆனால் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தியே அவற்றை மீண்டும் புதிதுபோல் மின்னச் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து […]

ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் பல வீடுகளில் காலையுணவாக இருந்தது பழைய சாதம். முந்தைய நாள் மீதமிருந்த சாதத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் இந்த வழக்கம், இன்று மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நொதித்த (Fermented) உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பழைய சாதத்தின் ஊட்டச்சத்து குறித்தும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பாரம்பரிய உணவு உடலுக்கு என்னென்ன நன்மைகளை […]

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அதற்காக விலையுயர்ந்த அழகுப் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களும் ஏராளம். ஆனால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கவும், அதன் இயற்கையான பொலிவை மேம்படுத்தவும் முடியும். அந்த வகையில், எளிதாக தயாரிக்கக்கூடிய சில வீட்டுவழி ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். வெயிலின் தாக்கம், மாசு, […]

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலை உணவாக மட்டுமல்லாமல் இரவு உணவாகவும் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் சாப்பிடப்படுகிறது. இதற்காக அடிக்கடி வீட்டில் மாவு அரைப்பது நேரம் எடுக்கும் என்பதால், இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலரும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் பாக்கெட் மாவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள், நேரம் குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு பாக்கெட் மாவு மிகவும் வசதியான தேர்வாக […]

பூண்டு மற்றும் தேன் இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை உணவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும். இதை தயாரிக்க, தேவையான அளவு பூண்டுப் பற்களை தோல் நீக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவை முழுவதும் மூழ்கும் அளவிற்கு தூய தேனை ஊற்றி, குறைந்தது 24 மணி நேரம் ஊறவைக்கலாம். அதன் பிறகு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் […]

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]

கடந்த சில ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பலர் இன்டக்‌ஷன் ஸ்டவ்வை மாற்று சமையல் சாதனமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், மழைக்காலங்களில் இன்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்தும் போது பாதுகாப்பு விஷயங்களில் அலட்சியம் காட்டினால் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. இன்டக்‌ஷன் ஸ்டவ் முழுவதும் மின்சாரத்தைச் சார்ந்து இயங்குவதால், […]

பொதுவாக இரவு நேரத்தில் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்குப் பதிலாக, அளவான பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, கொய்யாப்பழம் சத்துகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் இருப்பதால், உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கொய்யாப்பழத்தை சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக தொடர்ந்து அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம். இதில் உள்ள நார்ச்சத்து […]

மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, அதிக வேகமான வாழ்க்கை, சத்துக்கள் குறைந்த உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் தற்போது பலருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு உள்ளது. முன்பு வயதானவர்களிடம் அதிகம் காணப்பட்ட மாரடைப்பு, தற்போது இளம் வயதினரிடமும் சில சமயங்களில் குழந்தைகளிடமும் கூட ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை […]

பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான சில உணவுகள் இருக்கும். வயது எவ்வளவு ஆனாலும், சில உணவுகள் மீது இருக்கும் விருப்பம் மட்டும் மாறுவதில்லை. குறிப்பாக, பெரியவர்களாக இருந்தாலும் சில உணவுகளை குழந்தைகளைப் போலவே விரும்பி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சில உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பே பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இதை சாப்பிட்டால் இந்த நோய் வரும், அதை சாப்பிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு […]