நரேந்திர மோடி “ஒரு சிறந்த பிரதமர்” என்றும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய உறவுகளுக்கு எதுவும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில், நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் தற்போது சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு […]

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது . கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும் ஆற்று வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி […]

இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.  தகவல் […]

ஐரோப்பாவில் செட்டில் ஆக வேண்டும் என்று கனவு உங்களுக்கும் உள்ளதா? ஆம் எனில் அயர்லாந்து உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.. பசுமையான நிலப்பரப்புகள், வளமான வரலாறு மற்றும் விரிவடையும் வேலை சந்தை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற அயர்லாந்து, நீண்டகால குடியிருப்பாளர்களை வரவேற்கிறது. ஐரிஷ் நிரந்தர குடியிருப்பு, அதிகாரப்பூர்வமாக நீண்ட கால குடியிருப்பு என்று அழைக்கப்படுகிறது, இது EU/EEA அல்லாத குடிமக்கள் நாட்டில் வாழ, வேலை செய்ய மற்றும் படிக்க அனுமதிக்கிறது. […]

OpenAI என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நிறுவனமாகும். இது AI இன் வளர்ச்சியில் ஒரு முன்னணி நிறுவனமாகும்.. இந்த நிறுவனத்தின் chatgpt பிரபலமான AI சாட்பாட்டாக உள்ளது.. இந்த நிலையில், OpenAI, நிறுவனங்களை சரியான விண்ணப்பதாரர்களுடன் இணைக்க AI ஐப் பயன்படுத்தும் ஒரு புதிய தளத்துடன் வேலை சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது. OpenAI வேலைகள் தளம் என்று அழைக்கப்படும் […]

அழகு சாதனப் பொருட்களில், பெண்கள் லிப்ஸ்டிக்கை அதிகம் விரும்புகிறார்கள். அதன் வெவ்வேறு வண்ணங்கள் அவர்களை ஈர்க்கின்றன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கின் பெயர் மற்றும் அதன் விலை உங்களுக்குத் தெரியுமா? உலகின் முதல் 10 விலையுயர்ந்த லிப்ஸ்டிக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகின் மிக விலையுயர்ந்த லிப்ஸ்டிக்: அழகு சாதனப் பொருட்களைப் பற்றிப் பேசுகையில், உலகில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மிகவும் விரும்புகின்றன. இவற்றில், அதிகம் விற்பனையாகும் […]

வீடு, அலுவலகம் , அரசியல் , சினிமா என எதிலும் குறைவின்றி பகிரப்படுவது கிசு கிசு தான். அதிகளவில் கிசு கிசு பேசுவது பெண்கள்தான் என்ற கூற்றும் உள்ளது. ஆனால் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு நடத்திய ஒரு புதிய ஆராய்ச்சி இந்தக் கருத்து தவறு என்பதை நிரூபித்துள்ளது. ஆய்வின்படி, வதந்திகள், நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி அல்லது இயல்பானதாக இருந்தாலும் சரி, ஆண்களிடமும் பெண்களிடமும் சமமாகக் காணப்படுகின்றன. […]

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் […]