மேற்கு கொலம்பியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் அண்டை நாடான ஈக்வடாரிலும் உணரப்பட்டன. கொலம்பிய […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
எங்களது கோரிக்கைகளை டிரம்ப் ஏற்கவில்லை என்றால் 2029 வரை ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029) அமெரிக்க நிர்வாகத்துடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து […]
கொலம்பியா நிலநடுக்கம்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டதுடன், வெனிசுலா உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் அதிர்வுகள் […]
சூரியன் அழியும் காலத்தில் பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் ஒரு புதிய பதிலை முன்வைத்துள்ளது. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது இறுதி நிலையை அடைந்து விரிவடையும் போது, அது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விழுங்கி பூமியையும் அழித்துவிடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க கேப்ரியல் ஹாரி என்ற சுயேச்சை ஆராய்ச்சியாளர் ‘ஜர்னல் ஆஃப் தி […]
ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். […]
வரலாற்றிலேயே முதன் முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியை(Telescope) பயன்படுத்தி சூரியனின் மேற்பரப்பை இதுவரை காணாத புதிய மற்றும் மிகத் துல்லியமான விவரங்களுடன் படம் மற்றும் வீடியோ மூலம் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய பதிவுகளில், இந்த புதிய பதிவுகளில், முன்பு நேரடியாகக் காணப்படாத சிறிய சுழல் வடிவ இயக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆய்வாளர்களின் விளக்கப்படி, சூரியனின் உள் பகுதியில் உள்ள அதிக வெப்பமுள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால், […]
இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயங்கரக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 41 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சுராபாயாவில் (Surabaya) இருந்து தெற்கு சுலாவெசியில் அமைந்துள்ள மக்காசார் (Makassar) நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட […]
அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான இலக்குகளை ஈரான் விரிவாக தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தன. போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை […]
ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் நாடு முழுவதும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, […]
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

