இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். இது மிகவும் சமநிலையான சக்தி மற்றும் ராஜதந்திர நடத்தை கொண்ட நாடாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகின்றன. இந்தியாவும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில், பியூ ரிசர்ச் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அதில் அவர்கள் உலகின் 24 நாடுகளிடமிருந்து இந்தியாவைப் பற்றிய கருத்தைக் கேட்டனர். கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவைப் பற்றிய நேர்மறை மற்றும் […]

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் […]

சூடானில் 2023ம் ஆண்டு தொடங்கிய இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டை, வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, மேலும் அதன் சில பகுதிகளை பஞ்சத்தில் தள்ளியது. இதனால் இன்றுவரை சூடானின் போர் பஞ்சம் மற்றும் நோயாக மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் பசி, காலரா தொற்றால் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், சூடான் நாட்டில் சுத்தமான […]

காதலனுடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த காதலி, சாட்ஜிபிடி-யிடம் ஆலோசனை பேரில் விசா இல்லாமல் சென்று விமானத்தை தவறவிட்டதால் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேரி கால்டாஸ் (Mery Caldass) என்பவர், தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு விசா தேவைப்படும் என்று ChatGPT-யிடம் அட்வைஸ் கேட்டுள்ளார். அதற்கு, விசா தேவையில்லை என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது. […]

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு படகு போக்குவரத்தை தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள சொஹொடா மாகாணம், கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் சந்தைக்காக படகில் பயணித்த போது படகு கவிழ்ந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. கடா கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்குச் நேற்று மதியம் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேலும் 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான கடுமையான அமெரிக்க வரிகள் காரணமாக சிலர் உடனடி வேலை இழப்பை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர் தீர்வுகள் மற்றும் […]

இந்தியாவுக்கு அணு மிரட்டல் விடுவது அண்டை நாடான பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் “பிடித்த பொழுதுபோக்கு” போல் தெரிகிறது. சமீபத்திய அணு மிரட்டலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் நஜம் சேதி வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, “என் நாட்டின் இருப்பே ஆபத்தில் இருந்தால், எந்த வகையான ஆயுதத்தையும் தவிர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீஃபின் நெருங்கியவராகக் கருதப்படும் சேதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி […]

கைபர் பக்துன்க்வாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக பிரதமரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான் தெரிவித்ததாக ஏஆர்ஒய் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும், பெரிய அளவிலான பேரழிவை நேரில் கண்டதாகவும் வாலி கூறினார். “முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. புனரின் சாகர்சி பகுதியில், பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்து […]

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]