மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள் உலகை மட்டுமல்ல, சாதாரண இந்தியர்களின் பட்ஜெட்டையும் உலுக்குவதாகத் தெரிகிறது. இந்தப் போர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணில் செலுத்தும் என்பது உறுதி என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டியிருக்கும் நேரத்தில், ஈரானில் விலைகளைக் கேட்டால் யாரும் அதிர்ச்சியடைவார்கள். அங்கு ஒரு லிட்டர் […]

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் இன்று புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“யாரை உச்ச தலைவராக நியமித்தாலும், அவர் அழிக்கப்பட வேண்டிய இலக்காகவே இருப்பார்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் அச்சுறுத்தவும், பிராந்திய நாடுகளுக்கு […]

மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]

கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]

அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், […]

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கேமரா வலையமைப்பை ஹேக் செய்து, உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மொபைல் போன் […]

ஈரானில் உள்ள நடன்ஸ் அணு நிலையத்தில் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேதம், அந்த அணு நிலையத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கட்டடங்களை பாதித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கதிர்வீச்சு கசிவு எதுவும் இல்லை என்றும், முக்கியமான நிலத்தடியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு கூடுதல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எப்படி எதிரி நாடுகளின் இலக்காக மாறினார்? அதிநவீன பாதுகாப்பு இருந்தபோதிலும் இஸ்ரேலிய ஏவுகணைகள் அவரை எவ்வாறு கண்காணித்தன? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பரபரப்பான பதில்கள் கிடைத்து வருகின்றன. கமேனியின் குடியிருப்பு வளாகம் முதல் அவர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்புகள் வரை அனைத்தும் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய கண்காணிப்பின் நிழலில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.. இஸ்ரேலிய உளவுத்துறை நீண்ட காலத்திற்கு […]

தெற்கு ஈரானில் உள்ள கெரஷ் நகரம் அருகே இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நில அதிர்வு அடிக்கடி ஏற்படும் இந்தப் பகுதியில் இது இயற்கையான புவியியல் இயக்கம் என்றும், உடனடியாக பெரிய சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், அமெரிக்காவும், […]