இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் உள்ள டேம் சாலை அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை […]

வன்முறைக்கு மத்தியில் நேபாளத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார். இந்தியாவின், அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, […]

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் இடிப்பு பணிகள் நிறைவடைந்தது; பாகிஸ்தான் அரசின் நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு தொடங்கியது என இந்திய பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகளை அறிந்த நபர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​இந்திய விமானப்படை லஷ்கர் அமைப்பின் முரிட்கே பகுதியில் உள்ள “மர்கஸ் தைபா” வளாகத்தை தாக்கியது. 1.09 ஏக்கர் […]

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உடைந்த எலும்புகளை 2-3 நிமிடங்களில் ஒட்ட வைக்கக்கூடிய, உலகின் முதல் ‘எலும்பு பசையை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்… இந்த உயிரியல் பசை கடல் ஓடுகளால் ஈர்க்கப்பட்டு, கடலில் உள்ள பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. இது முற்றிலும் மக்கும் தன்மை கொண்டது.. மேலும் இது 6 மாதங்களில் உடலில் கரைந்து, உலோக உள்வைப்புகளின் தேவையை நீக்குகிறது. சீனாவின் வென்ஜோ நகரத்தைச் சேர்ந்த டாக்டர் லின் ஜியான்ஃபெங் மற்றும் […]

சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் நேபாளத்தின் ஹோட்டல் துறை பேரிழப்பை சந்தித்துள்ளது.. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் சமீபத்தில் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது சூறையாடப்பட்டு அல்லது தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. இதனால் நேபாளத்தின் ஹோட்டல் துறை, ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹில்டன் ஹோட்டல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. […]

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த […]

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிப்பது எளிதான முடிவு அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் நான் அதன் மீது 50% வரி விதித்தேன். இது மிகப் பெரிய படியாகும், […]

உக்ரைனுடனான அமைதிப்பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளது என, ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், ‘உக்ரைன் உடனான போரை […]