பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் […]

பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பணியாளர்கள் உயிரிழந்தனர்.. கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.. மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்து ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். […]

இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI […]

குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருவரும் இன்று (ஆக. 15) அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேச உள்ளனர். ‘நேட்டோ’ எனப்படும், சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி உக்ரைனுக்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் […]

இந்தியாவில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை செங்கோட்டையில் பிரதமர் ஏற்றுவார். அதனைத்தொடர்ந்து, நாட்டில் வலிமை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டங்கள் இருக்கும். இதே நாளில் உலகில் வேறு சில நாடுகளும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் […]

முகத்தில் பருக்கள் தோன்றும் அதை கிள்ளுவது அல்லது அழுத்துவது என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான பழக்கமாக உள்ளது.. ஆனால் பருவை அழுத்தியதால், பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், முகத்தின் அதிக ஆபத்துள்ள பகுதியில் மூக்கின் கீழ் ஒரு பரு தோன்றியதை அடுத்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. லிஷ் மேரி என்ற பெண் தனது மூக்கிற்கு கீழே […]