பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]

சீனாவில் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்ற 64 வயது நபரின் குடலில் இருந்து டூத் ப்ரஷி மருத்துவர்கள் அகற்றினர். இதில் ஆச்சரியமான விஷியம் என்னவென்றால் 17 செ.மீ. நீளமுள்ள டூத் ப்ரஷ் அவரது உடலில் 52 ஆண்டுகளாக சிக்கியிருப்பது தெரியவந்தது. South China Morning Post வெளியிட்ட செய்தியின்படி, அந்த நபர் சீனாவின் குவாங்டாங் மாகாண பகுதியை சேர்ந்த யாங் (Yang) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், அமெரிக்கா தனது B-2 குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், பதற்றம் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலகம் ஒரு பெரிய போரின் விளிம்பில் இருப்பதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் உலகப் போர் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அழிவுகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்களை எவ்வாறு […]

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]

தேன் போல மனதை வருடும் தேநீர், வெறும் ஒரு சூடான பானமாக மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு கலை, சில சமயங்களில் மிகுந்த ஆடம்பரத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள சில தேநீர்கள், அவற்றின் மணமும் சுவையும் மட்டுமல்லாது, அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் செய்திகளாலும், மரபுகளாலும் புகழ்பெற்றுள்ளன. பாண்டா உரமிடப்பட்ட தோட்டங்கள் முதல் வரலாற்று மலைத் தோட்டங்கள் வரை, இத்தேநீர்கள் தனிப்பட்ட கதை கொண்டவை. இந்த வகையான தேநீர்கள், […]

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் […]

சீனாவில் புதிய ஆபத்தான வௌவால் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல சீன பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். 2017 முதல் 2020 வரை பத்து இனங்களைச் சேர்ந்த 142 வௌவால்களிடமிருந்து சிறுநீரக மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர். இந்த மாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொண்டதில் 22 வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டது.. இதில் 20 முற்றிலும் புதிய வைரஸ்கள், இரண்டு ஹெனிபா வைரஸ்கள் கொடிய ஹென்ட்ரா […]

பல முறை ஏற்பட்ட தாமதங்களைச் சந்தித்த பிறகு ஆக்ஸியம் மிஷன் 4 மூலம் ஃபால்கன் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து […]

2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]