291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா? நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை […]

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்திய மாணவர் ஒருவரை குற்றவாளியைப் போல கையில் விலங்கு போட்டு தரையில் தள்ளி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோவில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில், ஒரு இந்திய மாணவரை அதிகாரிகள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தியதாகவும், […]

பிலிப்பைன்ஸின் கலடகனில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி, இன்று (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. பிலிப்பைன்ஸுக்கு முன்பு, சீனா, இந்தியா, திபெத் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, கலடகன் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த […]

உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படி நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்வுகளில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்று ஒரு எதிர்பாராத நிகழ்வு உலக மக்கள் மற்றும் மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம், மருத்துவ ரீதியாக சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த பெண் எப்படி உயிர்பெற்றார்? […]

ஜூலையில் மெகா சுனாமி பேரழிவு நிகழக்கூடும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்றும் ஜப்பான் பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மாங்கா கலைஞர் ரியோ தாட்சுகி (Ryo Tatsuki), அவரது எதிர்கால கணிப்புகளால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]

இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக […]

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்சியம் மிஷன் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும். மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் […]

குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]

2020-ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் வெடித்த கோவிட்-19 தொற்று இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கிறார். அவர் உருவாக்கிய காமிக்ஸ்கள் மூலம் அல்ல, உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதில் இவருக்கு “ஜப்பானிய பாபா வாங்கா” […]

தொழில்நுட்ப வளர்ச்சி, நகர்மயமான வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை காரணமாக, சீனாவில் பல பெண்கள் கடும் மன அழுத்தத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மனஅழுத்தத்திலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கான புதிய வழி ஒன்று, தற்போது அங்குள்ள முக்கிய நகரங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதுவே — “கட்டிப்பிடி வைத்தியம்” (Cuddle Therapy). இதன் படி, பெண்கள் ஒரு சிறிய தொகையை செலுத்தி, தாங்கள் விரும்பும் ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிக்க அனுமதிக்கின்றனர். […]