பல முறை ஏற்பட்ட தாமதங்களைச் சந்தித்த பிறகு ஆக்ஸியம் மிஷன் 4 மூலம் ஃபால்கன் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து […]

2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]

இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]

இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

3-ம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் 3 ஆம் உலகப் போர் குறித்த அச்சங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஈரான் தனது […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை என்று கூறும் உளவுத்துறை அறிக்கையை ட்ரம்ப் நிராகரித்தார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழிக்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தியிருக்கலாம் என்ற ஆரம்பகால உளவுத்துறை தகவல்கள் வெளியானதாக சிஎன்என் நிறுவனம் […]