fbpx

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது…? மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,082 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 07 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,59,447 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,13,761 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,486 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,71,46,012 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,67,659 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#திருப்பூர்: திடீரென காணாமல் போன சிறுமி.. விசாரணையில் பெற்றோருக்கு அதிர்ச்சி.!

Sat Nov 5 , 2022
திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி […]
7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

You May Like