திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தொகுதியில் பேசிய அவர், “திமுகவின் 51 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா? கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் 505 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி வருகிறார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அறிவிப்பு கொள்ளை புறத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. ஏழை எளிய தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் அரிசி, பருப்பு, உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிமுக ஆட்சி காலத்தில் விற்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறியதோடு அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் விண்ணை முட்டுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வெளி மாநிலங்களில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அவற்றை குறைவான விலைக்கு மக்களைப் பாதிக்காத வகையிலும் வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டு வைத்திருந்ததோடு மக்களை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் எனக் கூறியது அமைச்சர் நேரு, எம்ஜிஆருக்கு பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது தற்பொழுது திமுகவிற்கு உள்ளதாக நேரு கூறினார். எம்ஜிஆருக்கு என தனி அடையாளம் உண்டு. அவருக்கு இணை எவருமே இல்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ-வினர் அழுத்தம் தந்ததால்தான் திமுக அரசு வேறு வழியின்றி உரிமைத் தொகை வழங்கியது. இதனைப் பெற்றுத் தந்த அதிமுக தான். பக்கத்து மாநிலமான கர்நாடகவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே தனது வாக்குறுதியை நிறைவேற்றியது.
திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசும் ஆனால் வந்த பிறகு அதை செய்யாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர் மக்கள் படும் கஷ்டத்திற்காக கொடுக்கவில்லை தேர்தலை வருவதா அவர்கள் வழங்குகின்றனர். திமுக செல்வாக்கை இழந்து வருகிறது வரும் தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. டிஜிபி அறிவிப்பதில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை.
சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் போதை பொருளை கட்டுப்படுத்தி விட்டது கூறுகிறார்.ஆனால் தினமும் செய்தித்தாள் போதை பொருட்கள் பிடிபட்டது வழக்குகள் பற்றிய செய்திகள் வருகிறது. திமுக ஆட்சி ஏற்ற ஒரு ஆண்டுகளையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது குறித்து அதிமுக எச்சரித்தது தமிழகத்தில் மாணவர்கள், பொதுமக்களில் பலரும் போதைப் பொருட்களில் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். நிலைமை கைமீறிப் போன நிலையில் உதயநிதி தலைமையில் உறுதிமொழி எடுக்கிறார்களாம். திமுக ஆட்சியில் முதியோர், காவல்துறை அதிகாரிகள், பெண்கள், மாணவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லை. கோடை கொள்ளை திருட்டு வழிப்பறி என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவும். அதனை சரி செய்யும்.
இங்கிருக்கும் அமைச்சர் துணை முதல்வருக்கு ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். அமைச்சர் என்று பிறகு அதில் தான் கவனம் செலுத்த வேண்டும் மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இங்கிருக்கும் வெல்க கம்பெனி உள்ள சிறுகுறி தொழில் செய்யும் கம்பெனிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது வீடு கடைகளுக்கு என மின் கட்டணம் தனித்தனியாக உள்ளது அதேபோல் மாநகராட்சிகளை சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக அரசு உள்ளது குப்பையை கூட விட்டு வைக்கவில்லை என்றார்.