தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரும் சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினம் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட செங்கோட்டையன் பேசியதாவது:- பத்து தோல்வி பழனிசாமி மீண்டும் தோற்கத் தான் போகிறார். 50 லட்சம் கோடி சம்பாதித்தும் அவருக்கு ஆசை தீரவில்லை.
அம்மா மறைவிற்கு பிறகு நான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும். ஏமாந்துவிட்டேன்.. ராத்திரி வரை நான் தான்.. ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. சசிகலா காலையில் எங்கிட்ட கேட்டாங்க. யார் முதலமைச்சரா இருந்தா என்ன.. கட்சி உடையாமல் இருந்தால் போதும் என்று நான் தான் சொன்னேன்.. ராத்திரி வரை என்னிடம் சசிகலா நான் தான் முதல்வர் என்று சொல்லியிருந்தார். ஆனால் திடீரென மலைப்பாம்பு போல என் காலுக்கு அடியில் ஊர்ந்து வந்தார் எடப்பாடி. நானும் மலைப்பாம்பு தான் வந்துவிட்டதோ என நினைத்து சேரை தூக்கினேன்..
காலைப் பிடித்து கெஞ்சிவிட்டு முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு பிறகு சசிகலாவையை தூக்கி எறிந்தார். டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணினார். ஆனால் கடைசியில் அவரையும் நீக்கிவிட்டார். 11 பேர் ஓட்டு போட்ட ஓ பன்னீர் செல்வத்தையும் கழட்டிவிட்டுவிட்டார். இவரை காப்பாத்தின பாஜகவையும் லோக்சபா தேர்தலில் கழட்டி விட்டார்ல. பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் தருவேன்னு சொல்லி கடைசியில் அவரையும் ஏமாத்திவிட்டார். அண்ணாமலை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்று யாராவது சொல்லுவாங்களாப்பா. ஆனால் எடப்பாடி அதையும் செய்தார்.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன் என்று சொன்ன ஒரே தலைவர் நம் தளபதி தான்.. அத்தனை பேருக்கும் வீடு, இருசக்கரவாகனம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் வருஷத்திற்கு 6 சிலிண்டர்கள் மணப்பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவை இது எல்லாம் எப்படி நிறைவேற்ற முடியும் என்று கேட்டார்கள்.
அதற்கு தளபதி சொன்னார், ஆண்டுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி பட்ஜெட், 1 லட்சம் கோடி ஊழல்.. ஐந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடியை வைத்துக்கொண்டு நேர்மையான ஆட்சியை நடத்தி காண்பிப்பேன் என்று சொன்னார். இப்போ கூட ஓட்டுக்கு காசு கொண்டு வருவாங்க எல்லாத்தையும் வாங்கிவிட்டு விசில் அடித்துவிட்டுவிடுங்கள் என்று பேசினார்.
Read more: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிப்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா..?



