மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கணவனை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்!

affair murder

கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த இவர், புழல் காவாங்கரையைச் சேர்ந்த பூர்ணிமா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

காலப்போக்கில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரத்தினவேல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே, தனது மனைவியின் அண்ணி சரண்யாவுடன் ரத்தினவேலுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் தனியாக வசித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும், ரத்தினவேலுவை உறவினர்கள் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் அந்த உறவை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள், ரத்தினவேலுவை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை ரத்தினவேல் தனது இருசக்கர வாகனத்தில் மொண்டியம்மன் நகர், வ.உ.சி. தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்றவர்கள், அவரது இருசக்கர வாகனத்தின் மீது தங்களது வாகனத்தை மோதியுள்ளனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரத்தினவேலுவை, சரவணன் மற்றும் பழனிசாமி ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதில் ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்றம் போலீஸார், ரத்தினவேலுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது.

விசாரணையில், ரத்தினவேலுவின் மனைவியின் சகோதரர்களான காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் (39), தனசேகர் (34) மற்றும் எண்ணூரைச் சேர்ந்த அவர்களது உறவினர் பழனிசாமி (45) ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய இரண்டு கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பின்னர் உருவான கள்ளக்காதல், அதனால் ஏற்பட்ட ஆத்திரம் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இறுதியில் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கணவர்.. தற்கொலைக்கு முன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Saranya

Next Post

பாகிஸ்தான் அல்ல, இந்தியாவின் மெயின் எதிரியே சீனா தான்!. முன்னாள் ராணுவ தளபதி நரவனே அதிரடி

Fri Aug 21 , 2026
பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and […]
naravane

You May Like