கள்ளக்காதலை தொடர்ந்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை….!

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முறை தவறிய உறவில் ஒருவருடன் பழகினால் அந்த உறவு நிச்சயமாக அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை வழங்கிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல கோபம் என்பது ஒரு மனிதருக்கு இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல எல்லை மீறிய கோபத்தால் பல சமயங்களில் பல நபர்கள் செய்யும் செயல் அந்த நபர்களுக்கு தாங்க முடியாத இழப்புகளை வழங்கிவிடும்.

இந்த வகையில் சென்னை அண்ணாநகர் மேற்கு புது காலனியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் இவர் கடந்த 2008 ஆம் வருடம் அம்மு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார் சீனிவாசன் நாள்தோறும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவே அம்முவுக்கும், அவருடைய உறவினர் சரவணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீனிவாசன் தன்னுடைய மனைவியை கண்டித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடத்த 2018 ஆம் வருடம் ஸ்ரீனிவாசன் உடன் இணங்க மறுத்து அம்மு தன்னுடைய உறவினருடன் மட்டுமே இல்லற வாழ்க்கை நடத்த முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஆகவே ஆத்திரத்திற்கு உள்ளான சீனிவாசன் அம்முவை கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்.

இது தொடர்பாக டி.பி. சத்திரம் காவல் துறையினர் வழ்க்கு பதிவு செய்து ஸ்ரீநிவாசனை கைது செய்தனர் அவர் மீதான வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச். முகமது ஃபாருக் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தன்னுடைய மனைவியை திட்டமிட்டு ஸ்ரீனிவாசன் கொலை செய்யவில்லை என்பது உறுதியானதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 வருட கால கடுங்காவல் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் முடித்துவிட்டு எரித்து தீர்ப்பு வழங்குகிறேன் என்று கூறினார்.

Next Post

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர்.. சதை உண்ணும் ஒட்டுண்ணியால் பார்வையை இழந்த சோகம்..

Sat Feb 18 , 2023
காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய நபருக்கு, ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.. அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் (Contact Lense) அணிந்துள்ளார்.. இருப்பினும், காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கியதால், அவரின் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.. சமீபத்தில் பிசியான வேலை நாளை முடித்த உடன் தூங்க வேண்டும் […]

You May Like