பள்ளி ஆசிரியராக ஆவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. TET இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கட்டாய ஓய்வு பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (RTE சட்டம்), 2009 இன் விதிகளை விளக்கி நீதிபதிகள் தீபங்கர் […]

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 812 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,817 பேர் காயமடைந்தனர். நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தத் தகவலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஒரு தலிபான் அதிகாரியின் கூற்றுப்படி, கடந்த தசாப்தத்தில் இது மிகவும் மோசமான நிலநடுக்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரமாக மருத்துவமனைகள், தங்குமிடம், உணவு மற்றும் சுத்தமான நீர் தேவை. ஆப்கானிஸ்தானில் […]

திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதகற்காக அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.. அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களும், இந்திய தூதரக அலுவலர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடந்த தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இன்று கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் […]

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, செப்டம்பர் 5 ஆம் தேதி மியூனிக் ஆட்டோ ஷோவில் தனது முதல் Neue Klasse காரான புதிய தலைமுறை BMW IX3 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சொகுசு மின்சார SUV, Vision Neue Klasse கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிமீ வரை செல்லும். சிறப்பு என்னவென்றால், இதற்கு வேகமான […]

தென்னிந்தியாவின் முன்னணி உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா கேரளாவிலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. பாக்ஸ் ஆபிஸில் வசூலில் முன்னணியில் இருக்கும் நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் வலம் வருகிறார். திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் […]

வீட்டின் தூய்மை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. வீட்டைத் துடைப்பது என்பது சுத்தம் செய்யும் பணி மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் ஒரு ஆன்மீகச் செயலாகும். எனவே, சில பொதுவான தவறுகளைச் செய்வது வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் குடும்பத்தில் பல சிக்கல்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பணம் தொடர்பான சிக்கல்கள் இன்றி, வாக்குவாதம், தேவையில்லாத சண்டைகளும் வருமாம்.. எதிர்மறையை அழைக்கும் அந்த தவறுகள் என்னென்ன என்று […]

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன், கோவையின் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண ஆன்லைன் நட்பாகத் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால் 2022ஆம் ஆண்டு, தினேஷ் நேரில் அந்தப் பெண்ணைச் சந்தித்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண் தன்னிடம் காதல் எண்ணமே இல்லை எனத் தெளிவாக […]

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், […]