மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவன், நீரில் இருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தை கிராமத்துக் குளத்திலேயே கழித்து வருகிறான். இரவும் பகலும் நீரிலேயே இருக்கும் அச்சிறுவனுக்கு ஊர் மக்கள் உணவைக் குளத்திலேயே வழங்கி வருகின்றனர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், […]

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொகுதிப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறியவும் ஏதுவாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்காக மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலக உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக […]

வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஈரானுடனான அனைத்து வர்த்தக, வணிக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமீரகம் குற்றம்சாட்டியுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்த இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று அமீரக […]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி ஹோட்டல் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவச் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட […]

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை , மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும். சென்னை […]

40 வயதை கடந்துவிட்டாலே வயதாகிவிட்டது என்று அர்த்தமில்லை. இருப்பினும், வயது அதிகரிக்கும்போது உடலில் இயற்கையாகவே சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தசை நிறை, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் மீள்வது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை மாறக்கூடும் என்பதால், இந்த வயதுக்குப் பிறகு உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமாகிறது. சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளுடன், காலை நேரத்தில் சில […]

தலைவலி ஏற்பட்டால் பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்தியதுதான் காரணமாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், தண்ணீர் குறைவாக குடிப்பது, உணவு சாப்பிடாமல் இருப்பது, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது, மன அழுத்தம், தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால், தலைவலி அடிக்கடி திரும்பத் திரும்ப ஏற்படுவதுடன் அதன் தீவிரமும் […]

மூன்றாம் உலகப் போர் அல்லது பெரும் இயற்கை பேரிடர்கள் நேர்ந்தாலும் தங்களது விலைமதிப்பற்ற கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், உலகப் பெரும் பணக்காரர்களுக்காக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிநவீன பிரம்மாண்ட பாதாளப் பாதுகாப்புப் பெட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற புரூனிக் மலைப்பகுதியில் (Brunig Pass), ‘புரூனிக் மெகா சேஃப்’ (Brünig Mega Safe AG) என்ற தனியார் நிறுவனம் இந்த மெகா தற்காப்பு அரண் […]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாட்டா பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் 65 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உட்பட நான்கு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லம் பரவூர் பகுதியைச் சேர்ந்த சிவன்குட்டி செட்டியார் என்பவர் தனது 13 வயது பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டிக்கிடந்துள்ளது. 8-ஆம் வகுப்பு […]

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்வது அல்லது தூங்குவதற்கு சற்று முன்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அது செரிமானம், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாமதமான இரவு உணவும் ரத்தச் சர்க்கரையும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும் வளர்சிதை […]