fbpx

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்த நிலையில், ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் ஆக செயல்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை …

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, …

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி, விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதேபோல் பாஜக சார்பில் விஜய் வசந்தின் நெருங்கிய உறவினரான தமிழிசையை களமிறக்கலாம் என்று …

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து பாஜகவிற்கு வந்தவர், தென்சென்னை மாவட்டத் தலைவர் ‘லேலண்ட்’ சீனிவாசனைச் சந்தித்து 1999ஆம் ஆண்டு பாஜக உறுப்பினரானார். தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழக பாஜக மாநில தலைவராக உயர்த்தியது.

கட்சி உறுப்பினரான …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். …

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியது. மத்திய , மாநில அரசு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் மழை வெள்ளப் …

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது என்றால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு உண்டானது. நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த …

புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதலஅமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ”திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகிக்கிறார்” என்று பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் …

மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் …

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மருத்துவர்களுக்கு வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். காரணம் தொடர்ச்சியாக 36 மணி நேரம் …