fbpx

தமிழிசை சௌந்தரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழிசை சௌந்தரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு. மேடை நாகரீகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித் …

நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக வளர்ச்சியடைவில்லை எனக் கூறினார்.

பாஜகவின் அகில இந்திய தலைமை, மாநிலத் தலைவரை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூறிய எஸ்.வி.சேகர், “டெல்லி தலைமை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒன்று உருவாக்கப்பட்டது. எல்லாமே “paid …

யமுனை வெள்ளப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலை இடிக்க அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கும் போது உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறியது.

நீதிமன்ற விசாரணையின் போது, …

Landslide: சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆங்காங்கே 1500 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மாங்கன் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு …

கன்னட நடிகர் யுவராஜ்குமார் தன் காதல் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பா தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் கணவன், மனைவியாக 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது இவர்களது உறவு விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில், யுவராஜ்குமாரின் வக்கீல் நோட்டீஸுக்கு ஸ்ரீதேவி பதில் அளித்திருக்கிறார்.

அதில், …

சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு வந்த திமுக பிரமுகரான குமாரசாமி, ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் …

புகைபிடித்தல் ஒரு மோசமான பழக்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனென்றால், புகைபிடித்தல் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது கிடையாது. இது இதய ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும். …

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜக 19 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, …

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். …

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் சுமார் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 …