fbpx

உங்கள் வீட்டுக் கடனை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்துவது சவாலானதாகத் தோன்றலாம். இருப்பினும், உங்களது செலவை கவனமாக திட்டமிட்டு பயன்படுத்தினால், அதை எளிதாக நிறைவேற்றலாம். வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கும், குறைந்த EMI செலுத்துவதற்கும், வட்டிச் செலவுகளைச் சேமிப்பதற்கும் முன்கூட்டியே செலுத்துதல்கள் சிறந்த வழியாகும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிக்க …

பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கியமான அடையாளச் சான்று ஆவணமாகும், இது பல வேலை தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்ற ஆவணங்களைப் போலவே, பாஸ்போர்ட்டும் அதன் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சில நிமிடங்களில் உங்களின் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

ஒருவர் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​விண்ணப்பப் படிவத்துடன் …

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில், தற்போது வரை பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கொரோனா …

ஜெமினி கணேசனுக்கு ’சாம்பார்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா …

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியது குறித்து எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, …

4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் 100% மாணவர் …

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் …

இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்.. அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் …

சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டினை தவிர்க்கும்‌ வகையில்‌ தமிழக அரசு சார்பில் பொதுமக்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டும்‌, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டும்‌ தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின்‌ அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல்‌ செய்து அபராதம்‌ விதிக்கவும்‌. …

கொரோனா தொற்றின் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தொற்று முடிவுக்கு வருவது என்பது நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவும் கடந்து போகும் என்ற …