fbpx

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் 2022ஐ ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்சார சட்டத் திருத்த வரைவு – 2022ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினுடைய எதேச்சதிகாரப்போக்கின் …

”கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அமமுகவின் பொதுக்குழு கூட்டம் …

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் …

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் …

அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய …

மிகவும் குறைந்த செலவு விகிதத்துடன் இந்திய தொலைத் தகவல் வலைப்பின்னல் இப்போது உலகிலேயே இரண்டாவது பெரியதாக உள்ளது. மோடி அரசின் சந்தைக்கு உகந்த கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஊக்கம் பெற்றுள்ளது என்று மத்திய இணையமைச்சர் தேவுசின் சௌஹான் தெரிவித்தார். தொழில்துறைக்கு “எளிதாக வணிகம் செய்தல்”, ஊரகம் மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழ்வோரையும் உள்ளடக்கி அனைத்து மக்களுக்கும் …

காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் …

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்..

சென்னையில் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. இது மரியாதை நிமித்தமன சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டின் …

பாஜக கூட்டணியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக உடனான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து …

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நிதி சுதந்திரத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM- Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த …