3 பச்சிளம் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி (36) என்ற தாயின் வழக்கில், ஒருமித்த முடிவை எட்ட முடியாததால், இதனை ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என்று நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி 24 அன்று, அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் டக்ஸ்பரி நகரில் உள்ள தனது வீட்டில் ஐந்து வயது கோரா, மூன்று வயது டாசன் மற்றும் எட்டு மாதக் குழந்தை கேலன் ஆகிய மூன்று […]

வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி தற்போதே சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் […]

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தை மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பிரதான அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சின்னம் தவெக-வுக்கே நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 35 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து அசத்தியது. சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான […]

இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு […]

காதலித்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த நிலையில், தற்போது சாதியை காரணமாகக் கூறி திருமணத்திற்கு மறுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை […]

தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், […]

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சியாக, தமிழக முதல்வர் விஜய் லண்டனுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தின் தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் முதலில் துபாய்க்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தில் தனி விமானத்தை பயன்படுத்தாமல், வழக்கமான பயணிகள் விமானத்திலேயே […]

காணாமல் போன இரு மகன்களை மீட்பதற்காக பீகாரைச் சேர்ந்த தம்பதி எடுத்த முடிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகன்களைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள், தாங்களும் பிச்சைக்காரர்களைப் போல வேடமிட்டு பல மாநிலங்களில் சுற்றித் தேடியுள்ளனர். இறுதியில் இரு மகன்களையும் தனித்தனியாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர். குஜராத் மாநிலம் முந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தத் தம்பதியின் 14 வயது மகன் ராகுல், 11 வயது […]

செங்கோட்டை தாக்குதல் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதி ஜசீர் பிலால் வானி, ராக்கெட் மற்றும் வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது குறித்து YouTube மற்றும் ChatGPT மூலம் தகவல்களைத் தேடியதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராக்கெட் அல்லது வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்த சம்பவம் […]