நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயின்று வரும் நபர்கள் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் […]

“மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற சாதனமல்ல; அது ஒரு நாட்டின் ஆன்மா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “எந்தவொரு வெளிநாட்டு மொழிகளுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், நமது நோக்கம் என்னவென்றால் நமது சொந்த மொழிகளில் சிந்திக்கவும், உரையாடவும், பெருமைப்படுத்தவும் வேண்டும் என்பதே […]

யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் […]

இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் அட்டை ஆகும். அந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த வாடிக்கையாளர் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க இயலும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். பணத்தேவை அதிகமாக இருப்பதால் அதை சமாளிக்க […]

நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம், உடல் எடை குறைக்கும் மருந்தான Wegovy (semaglutide)-வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கியதும், அமெரிக்க நிறுவனமான, Eli Lilly நிறுவனம் தனது Mounjaro மருந்தை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில், டென்மார்க்கைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk), உடல் எடையை குறைக்கும் மருந்தான […]

ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை சில நாட்களுக்கு தடைபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங் தொடர்பான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எஸ்பிஐ நெட் பேங்கிங் சேவை எஸ்பிஐ தனது வலைத்தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட […]