“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]
பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் […]
தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம […]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதனால் ஒரு சில நாட்களில் குறைந்தது 399 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்த அடைமழையால் நிலச்சரிவுகள், சாலைகள் இடிந்து விழுந்தன, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள், வீடுகள் மற்றும் முழு கிராமங்களையும் அடித்துச் சென்றன. கில்கிட்-பால்டிஸ்தானில், பனிப்பாறை ஓடைகள் மற்றும் திடீர் வெள்ளம் பல பகுதிகளை சேதப்படுத்தியது. ஸ்கார்டுவில், ஐந்து பாலங்கள் […]
அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத […]
ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த […]
சூடானின் இராணுவத்திற்கு எதிராகப் போராடும் ஒரு துணை ராணுவப் படையினர், டஃபூர் மேற்குப் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு முகாம் மீது நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சூடானின் உள்நாட்டுப் போர் ஏப்ரல் 2023 இல் இராணுவத் தளபதிகளுக்கும் RSF க்கும் இடையிலான அதிகாரப் போட்டியால் வெடித்தது. இந்தச் சண்டை வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, […]
வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, […]
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட […]
அன்றாடப் பணிகள்’ என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப் பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!’,ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்!’, `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்!’திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அந்தவகையில், கதென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுப் பொருட்களான இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவை அவற்றின் பொருட்கள் மற்றும் தயாரிப்பு […]