கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சாடிவயல் வனச் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த காட்டுப் […]

சென்னையில் பல ஆண்டுகளாக நீடித்த குடும்பப் பிரச்சினை தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. மனைவி மற்றும் குழந்தை திடீரென காணாமல் போனதாக கணவர் அளித்த புகாரில், வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் 150 சவரன் நகைகளும் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீஸ் நடவடிக்கையில் திருப்தி இல்லாமல் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தற்போது அந்தப் பெண் கேரளாவில் பிடிபட்டுள்ளார். வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன், இலக்கியாவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு […]

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் தனியார் பேருந்து பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் ஒரே வழித்தடத்தில் ரூ.4 வரை கட்டணம் அதிகரித்திருப்பது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் மூலம் புறநகர் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் […]

தலைநகர் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நீடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் நிலவும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் மின்தடையால் தொழில் மற்றும் விவசாயத்துறைகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பொதுமக்களின் தொடர் புகார்களை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ஆம் […]

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இத்தகைய சூழலில், சென்னையின் திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மீண்டும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் […]

சட்டப்பேரவையில் அமைச்சர் பேசிய விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. லஞ்சம் கொடுத்ததாகப் பேசிய நிதி அமைச்சர் என். மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தார். அந்தச் […]

பிரபல பாலிவுட் ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் மீண்டும் பெற்றோகவுள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். இவர்களின் மூத்த மகள் சராயா மல்ஹோத்ரா (Saraayah Malhotra) விரைவில் அக்கா ஆக போகிறார். சமூக வலைதளம் வாயிலாக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள அவர்கள், “எங்களுக்கு மீண்டும் ஒருமுறை உலகின் மிகப்பெரிய வரம் கிடைத்துள்ளது. எங்கள் இதயங்கள் அன்பாலும் நன்றியுணர்விலும் நிறைந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், தங்கள் மகள் சராயாவுடன் […]

அரசுத் தலைவராக தான் நிறைவு செய்துள்ள 25 ஆண்டுகாலப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதில் தனது உறுதியை மீண்டும் புதுப்பித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘சேவா ஜோதி’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், கடந்த 25 ஆண்டுகளில் தன்னை செதுக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. அக். 7, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட மாறுபடும் வட்டி விகிதக் (Floating-rate) கடன்களைப் பெற்றுள்ள வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 டிசம்பருக்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் செய்யப்படும் முதல் மாற்றம் இதுவாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில் ரெப்போ விகிதம் […]

புவெனஸ் ஐரீஸ் நகரில் உள்ள ஏஸ்டாடியோ மோனுமென்டல் மைதானத்தில், உலக கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக தனது 21 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு உணர்ச்சிகரமாக விடைபெற்றுள்ளார். ‘தி லாஸ்ட் டாங்கோ’ (The Last Tango) என பெயரிடப்பட்ட இந்த பிரியாவிடைப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் பெனின் அணியை வீழ்த்தியது. 85,000 க்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, […]