fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,257 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 42 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,553 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 9 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியே பரவி பலரது உயிரை பறிக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல், மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரை நீடிக்கிறது. ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில், கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

நீங்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், காத்திருந்து வாங்குவது நல்லது. நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், கார் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் வாகன தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால், அவ்வப்போது இதுபோல வாகனங்களின் விலையை உயர்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக […]

அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளரை டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கும் போது, டி20 அணியில் இருந்து விராட் கோலியை ஏன் நீக்க முடியாது? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், ”டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையே நீக்க முடியும் போது, டி20 அணியில் இருந்து கோலியை ஏன் நீக்கக் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Associate Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE Mechanical Engineering […]

கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், […]

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு […]

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பில் இருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, பின்னர் […]

சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்று கூறியுள்ளார்.  பெங்களூருவில் , கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் […]

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வசித்து வரும் மாளிகையின் சொகுசு வாழ்க்கையை போராட்டக்காரர்களும் வாழ்ந்து பார்த்தனர். இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள் போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட அனைத்து அறைகளிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்று (ஜூலை 10) வரையிலும் அங்கேயே உள்ளனர். முதன் முறையாக […]