சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
ஏற்கனவே திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இன்று இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர்தான் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி சீரத், தில்ஷன் என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,930 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,650 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ”டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. […]
சமையல் எண்ணெய் விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன் […]
தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக 2500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான […]
ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அதிமுக சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சசிகலா தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது […]
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 115 ஜி-ன்படி, இலகு ரக, நடுத்தர மற்றும் அதிக சக்தி கொண்ட மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வு தரநிலைகள் குறித்த அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஜூலை 1, 2022 அன்று வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகைகளான வாகனங்கள். வாகனத் தொழில் தரநிலை 149 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உற்பத்தி […]
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) புதிய பாலிசிகளை வழங்க அறிமுகப்படுத்த காப்பீட்டாளர்களை அனுமதி வழங்கி உள்ளது.. எனவே தற்போது கார் உரிமையாளர்கள் தங்கள், வாகனத்தின் பொதுவான பராமரிப்பு, மைலேஜ் மற்றும் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் மலிவான காப்பீட்டுக் கொள்கைகளை தற்போது வாங்கலாம். மோட்டார் காப்பீட்டை மிகவும் மலிவாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இது குறைந்த மைலேஜ் ஓட்டுநர்களுக்கு அதிக வெளிப்படைத்தன்மையையும் அவர்களின் […]