சாதி, மதத்தால் நம்மை பிரிக்கும் சக்திகளை பின்னுக்கு தள்ளி ஒன்றிணைந்து முன்னேற பாடுபடுவோம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக […]
2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார் ஆனால் பாஜக தலைவர்கள் பலரும், இந்த கூட்டணி ஆட்சி சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு எதிராக ஆளுங்கட்சி 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சி கவிழ்ந்தது.. உத்தவ் […]
திருமங்கலம் அருகே கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் தேர்தல் நடத்தப்பட்ட ருசிகர சம்பவம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நிலையூர் கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயில் வளர்க்கப்படும் மீன்களை கூட்டுறவுச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் உள்ளூர் மக்களுக்கு ஏலம் விட்டு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கண்மாயை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இதனால், […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 38,480 விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை, நெல்லை, சேலம், பர்கூர் அரசு […]
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் எலும்புமுறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவர் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு […]
காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் […]
உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் செல்லும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மழைக்காலம் வந்தாலே போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிராஃபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. மேலும், வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதுவும் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலையை சொல்லவா வேண்டும். மழை, டிராஃபிக் எல்லாவற்றையும் சமாளித்து முட்டி மோதி டெலிவரி செய்தால் சில […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது… நாட்டில் கடந்த 3 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இந்த சூழலில், அதிகரித்து வரும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதற்கிடையே, 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த […]