இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக […]
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் ராஜ் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியின் தாய், தந்தை வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்தனர். சிறுமியின் ஆயாவும் கடைக்கு சென்றிருந்தார். இதனால் சிறுமி மற்றும் அவருடைய தம்பி, தங்கைகள், […]
’தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் […]
இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை […]
தன்னுடைய மாமனார் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை புகார் அளித்துள்ளார். சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனா நாச்சியார் (என்ற) ரஞ்சனா (37). இவர், தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மாமனார் சரவணவேல் […]
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்கசந்திரா பகுதியில் பவர்லால் என்பவர் நகைக்கடை மற்றும் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்து கடையில் வேலை செய்யும் தர்மேந்திரா என்பவர் கடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு நகை வாங்குவது போல இரண்டு பேர் வந்து நகைகளை பார்த்து கொண்டு இருந்தனர். சிறிது […]
காலரா பரவல் காரணமாக தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”புதுச்சேரியில் இதுவரை 39 பேருக்கு காலரா இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, நாகை மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (33). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் காலை முட்டுக்காடுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு சுற்றுலா சென்றுள்ளார். பிறகு பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் அனைவரும் படம் பார்த்து உள்ளனர். பின்னர், மாலையில் […]
கேரள மாநிலத்தில் இன்றும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 […]
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி, தனது மகனுடன் போலீசில் சரணடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொற்கையை சேர்ந்த விவசாயி மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு ராஜராஜசோழன் (16), பாலமுருகன் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். போதைக்கு அடிமையான மகாதேவன், அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், மது குடிப்பதற்கு பணம் […]