தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்வது கோவை குற்றாலம். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை […]
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தில் வசித்து வருபவர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அந்த கிராமத்தில் வசித்து வந்த வேறொருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்கிலால் அவரது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், மங்கிலால் தனது மனைவியை அவரது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவியை கடுமையாக தாக்கி, உடைகளை அவிழ்த்து மானபங்கம் படுத்தியுள்ளனர். பிறகு, அந்த பெண்ணை […]
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, தமிழக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது… காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லையிலும் இன்று பாஜகவினர் […]
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் பிணம் பாதி அளவு எரிந்த நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் வந்ததும், மேலூர் துணை மேற்பார்வையாளர் பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாதி […]
தான் கதலித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்ததால் மனமுடைந்த காதலன் திருமண மண்டபத்திற்கு வந்து தன்னுடைய காதலியின் கண் எதிரே பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். ஐதராபாத்தில், தன்னுடைய காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுவதால் அதிர்ச்சியடைந்த காதலன், தன்னுடைய காதலிக்கு திருமணம் நடைபெறும், திருமண மண்டபத்திற்கு வந்து தீ குளித்தார். இது பற்றி காவல்துறையினர் நேற்று கூறியதாவது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞன்(20) […]
கொரோனாவின் கொடிய டெல்டா மாறுபாடு கடந்த ஆண்டு அழிவை ஏற்படுத்திய பிறகு, மற்றொரு ஆபத்தான ஒமிக்ரான் மாறுபாடு கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் வெளிவந்தது.. பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன், ஒமிக்ரான் மிகவும் பரவலாக உள்ளது.. மேலும் சமீபத்திய காலங்களில் பெரும்பாலான நிகழ்வுகள் இந்த மாறுபாடு காரணமாக ஏற்பட்டவை தான்.. ஒமிக்ரானின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இந்தியா உட்பட […]
டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.. ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது […]
சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி-யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த கூட்டத்தை நடத்த முடியும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், […]