பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எம்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பேசிய எம்எல்ஏ காந்திராஜன், பெண்கள் அழகாக இருந்தால் […]
கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் […]
அண்ணனுக்கு பதில் தம்பியை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல்ஹக், ஷேக் மீரான். இவர்களில் ஷேக் மீரான் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஷேக் மீரான் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் […]
பொதுக்குழு தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ஆம் தேதி […]
விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் […]
கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. மதுரை, நெல்லை, […]
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் […]
எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கு வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு. எடப்பாடி பழனிசாமி, நத்தம் […]