அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து அக்கட்சி முன் எப்போதும் கண்டிராத பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டவிதிகளின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகிவிட்டதாக தெரிவிக்கின்றனர். உட்கட்சியில் சிறுசிறு சலசலப்பாக தொடங்கிய இந்த […]
சின்னவர் என்று என்னை அழைக்கச் சொல்லவில்லை என்றும், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், “நான் மிகவும் ராசிக்காரன் என ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் வெற்றி இல்லை. கலைஞர், தளபதி, கட்சி தொண்டர்களால்தான் வெற்றி கிட்டியது. கழக மூத்த […]
சக மாணவிகள் ராகிங் செய்ததால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொள்ளும் […]
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் ( 40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் […]
சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் கடந்த 2017ஆம் தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்துள்ளதாக வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா சிபிஐ-யிடம் புகார் […]
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலாண்மை பயிற்சியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனம் : இந்திய நிலக்கரி நிறுவனம் பணியின் பெயர் : மேலாண்மை பயிற்சியாளர் கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பணியிடம் : இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள் : 481 […]
தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்; தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்ஸி சவாரிக்கான அடிப்படைக் கட்டணம் ரூ. 15 உயரும். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் கிலோமீட்டருக்கு ரூ. 1.5 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். புதிய கட்டணங்கள் குறித்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஏப்ரல் 2022 […]
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட […]
தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில் பணியாற்றும். உலாமாக்கல் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம். செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி […]