எஸ்.சி.பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவில் பொறுப்பில் […]
சந்திராயன் – 3 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற்றது. இதில் 75-வது பிறந்தநாள் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறமை […]
காகித கலை பயிற்சியை கற்பிக்க வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. பயிற்சியாளர்களால் […]
பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த […]
தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 34ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ”மற்ற கட்சிகள் எல்லாம் யாரோ துவங்கி, தற்போது வழி […]
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக, மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட பேக்கேஜில் குறிப்பிடாத சில கட்டாய விவரங்களை, க்யூ ஆர் கோட் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கிறது. இந்த சட்டத்திருத்தம், விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் க்யூ ஆர் கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது. மேலும், பேக்கேஜின் மேல்பகுதியில், முக்கிய விவரங்களை தெளிவாக வெளியிடுவதையும் அனுமதிப்பதோடு, எஞ்சிய விவரங்களை […]
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை தொடா்பான கருத்துக்களை வரும் செப். 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கல்விக் கொள்கை உயா்நிலைக் குழுவின் தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்துக்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகளை பெறுவதற்கு உயா்நிலைக் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், […]
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருக்கும் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, காவிரி ஆற்றில் குளிக்கவோ, […]
சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை, 42-வது முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், அணைகளின் பாதுகாபு கருதி கடந்த 8ஆம் தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ […]